NOTES --TAX

2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சிலசேமிப்புக்கள் 80 சி பிரிவின் கீழ் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம் அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்
1. ஆயுள் காப்பீட்டு பிரிமியம்
2. பொது பிரவிடண்ட் ஃபண்ட்
3. ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்
4. சுகன்யா சம்ரிதி திட்டம்
5. தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு உண்டு)
6. வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை
7. முதியோர் சேமிப்பு திட்டம்
8. யுனிட்டுகள் மூலம் காப்பீடு
9. முதலீட்டு சேமிப்புக்கள்
10. ஓய்வூதியம்
11. குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்குமட்டும்)
12. வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்
இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும். எனவே இவை குறித்து உங்கள் நிதிஆலோசகரின் அறிவுரையின் படி சேமிப்பதன் மூலம் வருமான வரி விலக்கு பெற முடியும். 80 c, 80 சி, income tax, tax rebate, வரி விலக்கு, வருமான வரி

1.மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

2.நிலையான கழிவு (Standard deduction) ரு.50,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

3.Housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

4.மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

5.Housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

6.Housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம்.

7.Housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

8.CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

9.School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

10.80DDB - Medical Treatment - ரூ.80,000/- வரை காண்பிப்பவர் 10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

11.மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)

12.மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

13.கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

14.நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

15.வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

16.Taxable income ரூ.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.12500/-  ஐ 87A ல்  கழித்துக் கொள்ளலாம்.

17.Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
18.
Income RangeTax rateTax to be paid
Up to Rs.2,50,0000No tax
Between Rs 2.5 lakhs
and Rs 5 lakhs
5%5% of your taxable income
Between Rs 5 lakhs
and Rs 10 lakhs
20%Rs 12,500+ 20%
of income above Rs 5 lakhs
Above 10 lakhs30%Rs 1,12,500+ 30%
of income above Rs 10 lakhs




19.. INCOME TAX ----List of benefits available to Salaried Persons



















No comments:

Post a Comment